உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

குர்ஆனை மனனம் செய்த; ஹாபிழ்களை கௌரவிக்கும் நிகழ்வு – கனமூலை சித்தீக் சர்வதேச கலாபீடத்தில்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மதுரங்குளி கனமூலை சித்தீக் சர்வதேச கலாபீடத்தில் முதன் முதலாக அல் குர்ஆனை மனனம் செய்து முடித்த கன்னி ஹாபிழ்களை கௌரவிக்கும் பிரமாண்டமான நிகழ்வு நேற்று (10) கலாபீடத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த இளம் ஏழு ஹாபிழ்களும் புனித உம்ரா கடமைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றார்கள். இது இவர்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது.

சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி அதிபரும், சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் ஆலோசகருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம். லபீர் (முர்ஷி) கலந்து கொண்டார்.

அல் ஹாபிழ் முஹம்மது நிசான் முஹம்மது ஆதில் – குருநாகல், அல் ஹாபிழ் முஹம்மது அய்யூப்கான் அஹமது சிராஸ் – ஆலங்குடா, அல் ஹாபிழ் நிஹ்மதுல்லா முஹம்மது நிப்ரான் – ரம்பேவ,  அல் ஹாபிழ் முஹம்மது ரிழா அஸ்பாக் அஹ்மத் – தில்லையடி, அல் ஹாபிழ் முஹம்மது பைசல் முஹம்மது பாதில் – விருதோடை, அல் ஹாபிழ் பஸ்மிகான் முஆவியா – பெருக்குவட்டான், அல் ஹாபிழ் ரபீக் செய்ன் அஹமத் – இலவன்குளம் ஆகிய ஏழு ஹாபிழ்களே இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். ஹாரூன், கே.எம்.எம். பைசர் மரிக்கார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ், முன்னாள் காதி நீதவான் அஷ்ஷெய்க் எம்.சீ.நெய்னா முஹம்மது (காஸிமி) உள்ளிட்ட மூத்த உலமாக்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள், பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதே வேளை இந்நிகழ்வினை சிரேஷ்ட ஊடகவியலாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் செய்தி பணிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ் சிறப்பாக தொகுத்து வழங்கினார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 259601

Search

விளம்பரங்கள்