உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து; சுனாமி எச்சரிக்கை.!!!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவுருக்களின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் அமைந்துள்ளதுடன், இது அடர்த்தியான மக்கள் தொகை இல்லாத நாரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை.

Related News

Total Websites Views

Total Views: 310739

Search

விளம்பரங்கள்