உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

தீகவாபி–ஆலங்குளம் விவசாய வீதி புனரமைப்பு 2026ல்: எம்.எஸ். உதுமாலெப்பை கேள்விக்கு பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் உறுதி.!!!

(கே எ ஹமீட்)

உதுமாலெப்பை எம்.பி யின் கேள்விக்கு பிரதி அமைச்சர் சபையில் உறுதி அளித்தார்.

கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றம் இன்று (03) நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் வாய்மூல கேள்வியாக 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள தீகவாபி – ஆலங்குளம் விவசாய வீதியும், வெள்ளக்கல் தோட்ட தரைப் பாலமும் சேதமடைந்துள்ளமை தொடர்பாககவும், மேற்படி வீதியையும், தரைப் பாலத்தையும் புனரமைப்புச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதில் அளித்த விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் 2026 ஆண்டின் திட்டத்தில் தீகவாபி – ஆலங்குளம் விவசாய வீதி உள்வாங்கப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.

விவசாயிகளின் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாராளுமன்றத்தில் இந்த கேள்வியை எழுத்து மூலமாக வழங்கினார் அதன் பயனாக அதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதையிட்டு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள், அமைச்சர் லால் காந்த, பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700155

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time