உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் இன்று மோதும் ருமேஷ் தரங்க.!!!

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் World Athletics Ultimate Championship தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க இன்று (13) களமிறங்குகிறார்.

இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஈட்டி எறிதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ள ருமேஷ் தரங்க, அண்மையில் நடைபெற்ற Diamond League ஈட்டி எறிதல் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்று சிறப்பான நிலையில் உள்ளார்.

இன்றைய போட்டியில் ஜெர்மனியின் Julian Weber, பாகிஸ்தானின் ஒலிம்பிக் சாம்பியன் Arshad Nadeem, கிரெனடாவின் Anderson Peters, டிரினிடாட் மற்றும் டொபாகோவின் Keshorn Walcott உள்ளிட்ட உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களும் பங்கேற்கின்றனர்.

உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ளதுடன், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் Diamond League உள்ளிட்ட முக்கிய சர்வதேச போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த World Athletics Ultimate Championship தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், இன்று (13) நிறைவடைகிறது.

இதனிடையே, போட்டியில் முதலிடம் பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. அதேவேளை, 8ஆம் இடத்தைப் பெறுபவருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166788

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time