உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை – உலக எரிபொருள் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்.!!!

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈரானிய ஊடகங்களில் பேசிய அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.

இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.

தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.

கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக இதன் வழியாகவே செய்கிறது. எனவே, இவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.

கச்சா எண்ணெய் தட்டுபாடால் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் பெறும் சாத்தியமுள்ளது .

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700961

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time