பாகிஸ்தான் துணை இராணுவப் படை தலைமையகம் மீது – பயங்கரவாத தாக்குதல்; 3 பேர் பலி.!!!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று (24) தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தலைமையகத்தை நோக்கி சென்றதாகவும், அவர்களில் ஒருவர் முதன்மை நுழைவாயிலுக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு தாக்குதலாளர் தளவளாகத்தின் உள்ளே நுழைந்து அங்கு குண்டை வெடித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 3 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இதனுடன் தொடர்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.






