திறமைக்கான தேடல் களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான; சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு.!!!
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மற்றும் ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரி ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய மாணவர்களின் திறமைக்கான தேடல் களம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) குருநாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
“கல்வியால் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளை நோக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட இந்த போட்டியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 300 மாணவர்களை கௌரவிக்கும் வகையிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐ.என்.எஸ். ஒன்லைன் கல்லூரியின் நிர்வாக தலைவி நஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக எப்.என்.மீடியா நிறுவனத்தின் உரிமையாளரும், சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சியின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளருமான ஊடகவியலாளர் ஏ.டபில்யூ.எம்.பஸ்லான்,
இஸ்லாமிய கலாசார ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வான், ரெயின்போ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் அசீம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.