உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

விமான நிலையத்தில் கோர விபத்து; வாகனங்கள் மீது மோதிய சரக்கு விமானம் – 5 பேர் பலி.!!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் புவேர்ட்டோ ரிகோவிலிருந்து வந்த போயிங் 767 சரக்கு விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஓடுபாதையை விட்டு விலகிய விமானம், விமான நிலையத்தின் எல்லை வேலியை உடைத்துக்கொண்டு அருகிலுள்ள சாலைக்குள் புகுந்ததுடன், அங்கிருந்த பல வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதன்போது விமானத்தில் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்களுக்குள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்தவர்களை மீட்புப் பணியாளர்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர். விமானத்துக்குள் சிக்கியிருந்த விமானி மற்றும் துணை விமானியும் தொழில்நுட்ப மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

விமானத்தின் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தீ மற்றும் எரிபொருள் கசிவு காரணமாக மீட்புப் பணிகள் சவாலானதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்தைத் தொடர்ந்து மியாமி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

விபத்து தொடர்பாக அமேசான் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215111

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time