துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஒருவர் பலி – 29 பேர் காயம்: 16 கட்டடங்கள் சேதம்.!!!
துருக்கியின் வடகிழக்கு மாநிலமான Balikesir பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
அது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
81 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். 16 கட்டடங்கள் நிலநடுக்கத்தினால் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று (10) இரவு 07.53 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் உணரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வரும் துருக்கி உள்துறை அமைச்சர் அலி யேர்லிகயா (Ali Yerlikaya) மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.