உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு.!!!

• மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி. 

பொலன்னறுவை, எல்லேவெவ பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர் நேற்று (23) உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஐந்து வயதுச் சிறுவனும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளிடமிருந்து காணியைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியமையே இருவரின் உயிரிழப்புக்கும் காரணம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் காப்பாற்ற முயன்ற மேலும் இருவர் மின்சாரம் தாக்கிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1256563

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time