உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

34 நிறுவனங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க.!!!

• காலாவதியான அரச நிறுவனங்களின் தேவையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அரச சேவையை நிபுணர்களுக்கு ஈர்ப்புடையதாக மாற்றுவது அவசியம்.

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் 34 நிறுவனங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை மூடுவது எளிதான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றை மூடும்போது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டியிருப்பதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சிக்கலான தன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் நிலவிய தேவைகள் தற்போது மாறிவிட்டதாகவும், அக்காலத்தில் அரச துறையினால் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட சில சேவைகளை இன்று தனியார் துறையினரும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், குறித்த சேவைகளை அரசாங்கமே தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமா அல்லது அவற்றைத் தனியார் துறையிடம் ஒப்படைக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், தனியார் துறையிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்துக்கு அதிக இலாபகரமானதாக அமையுமா என்பதையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தொழில்சார் நிபுணர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவதும், நிபுணர்களைக் கவரக்கூடிய வகையில் அரச சேவையை மாற்றியமைப்பதும் அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அவ்வாறு மாற்றங்களை மேற்கொள்ளத் தவறினால், நாட்டின் அரச சேவை பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1256401

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time