உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

உலகை உலுக்கிய அஹமதாபாத் விமான விபத்து குறித்த; பகீர் தகவல்.!!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் , புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அழைப்பில் யாரும் பேசவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அவசர அழைப்பு விடுக்கப்பட்டதும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அது அமைதியாக இருந்ததாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்துத் துறைகளால் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்பாக இந்த மே டே கால் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மே டே கால் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து அதாவது மெய்டர் என்றால் உதவி செய்யுங்கள் என்று அர்த்தமாகும்.

இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும்முன்பே, 825 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Related News

Total Websites Views

Total Views: 322875

Search

விளம்பரங்கள்