உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

நெதன்யாகுவின் நிலைமை குறித்து தெளிவில்லை – ஐஆர்ஜிசி தகவல்.!!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிலைமை குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஐஆர்ஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த தாக்குதல் ஏவுகணைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நெதன்யாகு உயிருடன் உள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாததால் பரபரப்பு நிலவுகிறது. இரு தரப்பிலிருந்தும் உறுதியான அறிக்கைகள் வெளியாகும்வரை நிலைமை பதற்றமாகவே தொடர்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700958

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time