உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு; ஹாஷிம் உமர் பௌண்டேஷனினால் – மடிக்கணணி வழங்கி வைப்பு.!!!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்வியினை தொடரும் மாணவர்களுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேஷனினால் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் 11ஆவது கட்ட விநியோகம் இன்று 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேஷன் தலைமையகத்தில் ஹாஷிம் உமர் பெளன்டேஷன் ஸ்தாபகர் இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர் அவர்களால் மடிக்கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது களனி பல்கலைக்கழக மாணவி எனுலி சேனாரத்ன, பேராதெனிய பல்கழைக்கழக மாணவி செல்வி எ.எப். அஸ்ரா, பேராதெனிய பல்கழைக்கழக மாணவி செல்வி எம்.ஜே. ஜெஸ்லா, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் எம்.எம். லுத்பா மற்றும் லுப்ரா ஆகியோர் மடி கணினிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, மேமன்கவி, காஞ்சிபுரம் தியாகராஜா, கே. பொன்னுத்துரை, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆகிப், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700462

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time