அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு திட்டம்: காஸாவில் நெதன்யாகு உரையை ஒளிபரப்ப உத்தரவு.!!!
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் ஐ.நா. பொதுச் சபை உரையை ஒளி மற்றும் ஒலிபரப்பு செய்ய காஸா முழுவதும் ‘இஸ்ரேலிய’ இராணுவம் ஒலிபெருக்கிகளை நிறுத்தி வருகிறது.
இதன்மூலம் நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐநாசபை கூட்டத்தொடரில் காஸா மக்கள் தொடர்பாக நெதன்யாஹு ஆற்றப்போகும் உரையை செவிமடுக்க செய்யவே இந்த ஏற்பாடு.
ஆசை காட்டும் வாக்குறுதிகள் மற்றும் நலன்புரி உதவிகள் மூலம் காஸா மக்களை மூளைச்சலவை செய்ய அமெரிக்காவும் மற்றும் இஸ்ரேலும் இணைந்து செயற்படுத்தும் உத்தி இதுவென ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஈரான்-இஸ்ரேல் 12 நாள் போரின் போதும் ஈரான் மக்களுக்கு நெதன்யாகு இதுபோன்று பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி மூளைச்சலவை செய்ய முயற்சித்தார்.
எனினும் ஈரான் மக்கள் அதற்கு அசரவுமில்லை, கால்பாதணிக்கும் கணக்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



