உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

விண்வெளி ஆய்வு நிறைவு; வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் – சுபான்ஷு சுக்லா.!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்காவின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்வ தேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட் டனர். சுமார் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி மாலை 3.00 மணியளவில் பூமியை வந்தடைந்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது.

டிராகன் விண்கலத்தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு வனம் மற்றும் நாசாவின் மீட்புக் குழுவினர் 4 விண்வெளி வீரர்களையும் விண்கலத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சு மார் இரண்டு வாரங்கள், 4 வீரர்களும் பல் வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படுவார்கள். இந்த நடைமுறைகளுக்குப் பிறகே ஷுபன்ஷு சுக்லா இந்தியா திரும்புவார்.

முன்னதாக, அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண் வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத் துக்கு பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அனுப்பின. இந்த விண்கலத் தில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந் தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26ஆம் திகதி சர்வ தேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

கடந்த 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி யுடன் சுக்லா உரையாடினார். கடந்த 3, 4, 8 ஆகிய திகதிகளில் திருவனந்தபுரம், பெங் களூரு, லக்னோவை சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். கடந்த 6ஆம் திகதி இஸ்ரோ விஞ்ஞானிகளு டன் அவர் ஆலோசனை நடத்தினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா 17 நாட்கள் தங்கியிருந் தார். அப்போது அவர் சுமார் 60 வகையான ஆய்வுகளை செய்தார். குறிப்பாக நெல், காராமணி, எள், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். அந்த விதைகளை அவர் விண்வெளியில் சிறப்பு பெட்டிகளில் வைத்து முளைக்கச் செய்தார். இந்த ஆராய்ச்சியில் இஸ்ரோ, கேரள வேளாண் பல்கலைக்கழகம், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாசி பன்றிக்குட்டி என்ற நுண் உயிரியை சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. நுண்நோக்கி உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். இந்த நுண் உயிரி விண் வெளியில் எவ்வாறு வளர்கிறது என்பது குறித்தும் சுக்லா ஆய்வு செய்தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இந்த பாசி வகைகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

மைக்ரோ அல்கா என்ற பாசி வகையையும் சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இதன் வளர்ச்சி குறித்தும் அவர் செய்தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். இது எதிர்கால விண்வெளி பயணத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை உட்பட ஒட் டுமொத்தமாக 60 வகையான ஆராய்ச் சிகளை சுபான்ஷு சுக்லா விண்வெளியில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 258980

Search

விளம்பரங்கள்