மெக்சிகோவில் ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம் வன்முறையுடன் முடிவு – ஆயிரக்கணக்கானோர் சாலையில் குதித்தனர்.!!!
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
நேற்று (15) மெக்சிகோ தலைநகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜனாதிபதி க்ளாடியா ஷீன்பாம் ஆட்சியை கண்டித்து, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டம், ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சூறையாட முயற்சியுடன் வன்முறைக்கு வழி செய்தது.
போராட்டக் களத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இதில் சுமார் 100 போலீசார் காயமடைந்தனர், போராட்டக்காரர்களில் 20 பேர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் கைதடி காட்டும் கருப்பு-வெள்ளை எலும்புகூடு தலை கொடியுடன் முன்னிலை வகித்தனர். அவர்கள் நாட்டில் ஆட்சி நடக்கவில்லை, கொள்ளையடிக்கும் கூட்டம் அதிகாரம் செலுத்துகிறது என்று முழங்கினர். போலீசார் ஜனாதிபதி வசிப்பிடத்தை பாதுகாத்த போது, கைகளில் கிடைத்த பொருட்களை தூக்கி வீசினர்.
மெக்சிகோவின் உருவாப்பான் நகரின் மேயர் கார்லஸ் ரோட்ரிக்வேஸ் கொல்லப்பட்டதை மேற்கொண்டு, ஜென்ஸீ இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கடும் ஆத்திரம் கொண்டிருந்தனர். நாட்டில் ஊழல், கிரிமினல் குற்றங்கள், உயர் பதவி வகிப்போருக்கு பாதுகாப்பின்மை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தை தூண்டியவர் வலதுசாரி கட்சிகள், மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாக பெருங்கூட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ஷீன்பாம் கூறினார்.
இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் சமீப காலமாக ஜென்ஸீ போராட்டங்கள் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது மெக்சிகோவிலும் அதே போல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.




