சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாசனைத் திரவியங்களுடன் 5 பேர் கைது.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏலக்காய் மற்றும் இஞ்சி அடங்கிய 9 பொதிகளுடன், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி பத்தளங்குண்டு கடற்பரப்பிற்கு அப்பால், இன்று (20) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படைக் கப்பலான எடிதர II மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பல நாள் படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏலக்காய் மற்றும் இஞ்சி அடங்கிய 9 பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த படகில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 59 வயதுக்குட்பட்ட கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், படகு மற்றும் கைப்பற்றப்பட்ட வாசனைத் திரவியங்களின் தொகுதி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

