உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கனமழை; பனிமூட்டத்தால் போக்குவரத்தும் பாதிப்பு.!!!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (19) நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனமழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மின்சார விநியோகமும் பாதிப்பு

இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளன.

இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரத் தடையால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1168156

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time