பாலமுனை பாறூக் எழுதிய “51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை – நூல் வெளியீடு.!!!
நாடறிந்த இலக்கியவாதி பாலமுனை பாறூக் எழுதிய “51 இலங்கை நூல்கள் இரசனை வழிப்பார்வை” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும், உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்
ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் சிறப்பதிதியாகவும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இலங்கை இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள பாலமுனை பாறூக், பல்வேறு தலைப்புகளில் பல நூல்களை ஏற்கனவே வெளியிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவில், நூலின் முக்கியத்துவம், அதன் இலக்கியப் பயணம் மற்றும் ஆராய்ச்சி முறைமை குறித்து அதிதிகள் பாராட்டுத் தெரிவித்து கருத்துரைகள் வழங்கினர்.




