உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 20, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

புதிய காத்தான்குடி தெற்கில் இடமாற்றம் பெற்ற கிராம உத்தியோகத்தருக்குக் கௌரவிப்பு; புதிய உத்தியோகத்தர்களுக்கு வரவேற்பு.!!!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.எப். ஸம்ஹாவைக் கௌரவிக்கும் நிகழ்வும், புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். பாத்திமா அப்றா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முனீர் நழீமி ஆகியோரை வரவேற்கும் நிகழ்வும் இன்று (20) செவ்வாய்க்கிழமை மாலை புதிய காத்தான்குடி தெற்கு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, இடமாற்றம் பெற்றுச் சென்ற கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.எப். ஸம்ஹாவுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். பாத்திமா அப்றா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முனீர் நழீமி ஆகியோர் வரவேற்கப்பட்டனர்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய புகைத்தல் எதிர்ப்புக் கொடி வாரத்தை முன்னிட்டு, புதிய காத்தான்குடி 167C தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொடி விற்பனை மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் பிரதிநிதிகளுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் கலந்து சிறப்பித்தார்.

மேலும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பார்த்தும்மா பரீட், வலய முகாமையாளர் முஸம்மில், கிராம உத்தியோகத்தர்களான ஏ.எல்.எப். ஸம்ஹா மற்றும் எம்.எஸ். பாத்திமா அப்றா, அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். முனீர் நழீமி, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் முகாமையாளர் மயூரி உள்ளிட்ட சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1247055

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time