உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

பாதசாரி கடவையில் கார் மோதி விபத்து; 47 வயது குடும்பஸ்தர் பலி.!!!

​மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாதசாரி கடவையினூடாக வீதியைக் கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆயித்தியமலை, மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான கந்தசாமி லவக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்லவுள்ள தனது மகனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக, கொழும்பு செல்வதற்கான நேற்று இரவு 9:15 மணிப் பேருந்தை பிடிப்பதற்காக இவர் ஆயித்தியமலையிலிருந்து செங்கலடிக்கு வந்துள்ளார்.

செங்கலடி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையினூடாக மறுபுறம் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஏறாவூரில் இருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்த கார் ஒன்று இவர் மீது பலமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் தலையின் பின்பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், உடனடியாக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், நள்ளிரவு வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண  விசாரணை எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1246340

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time