உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 20, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

விமானத்திலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பெண்; தாயும் சேயும் நலம்.!!!

கட்டுநாயக்க: குவைத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பெண்ணொருவர், பயணத்தின்போது ஜசீரா ஏர்வேஸ் விமானத்திலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு விமானத்தில் குழந்தை பிறந்துள்ளது.

குறித்த பெண், 2024ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காகக் குவைத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பும் பயணத்தின்போது அவருக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமானப் பணியாளர்களின் உடனடி உதவியுடன் அவர் விமானத்திலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விமானி முன்கூட்டியே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

விமானம் தரையிறங்கியதும், தாய்க்கும் குழந்தைக்கும் அவசர மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் வண்டியும் மருத்துவக் குழுவினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர், தாயும் குழந்தையும் மேலதிக மருத்துவப் பராமரிப்புக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவல்களின்படி, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

நீண்ட தூர விமானப் பயணத்தின்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இச்சம்பவம், விமானப் பணியாளர்களின் உடனடி செயற்பாடுகளினதும் அவசர மருத்துவ ஏற்பாடுகளினதும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1246464

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time