உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்.!!!

• 30 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நடவடிக்கை – யானைகள் பாதுகாப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தையும் தயாரிக்கத் திட்டம்.

கல்கமுவ, சியம்பலங்கமுவ பகுதியில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிதல், காட்டு யானைகளின் நலனை உறுதிப்படுத்துவதற்கான முறையான செயற்பாட்டு நடைமுறைகளைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில், பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டப்ளியு.டப்ளியு. ஹெரிசன் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவார்.

மரணத்திற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை

‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, அதற்குக் காரணமான உடனடி மற்றும் மறைமுகக் காரணிகள் எவை என்பன தொடர்பில் இக்குழு விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

மேலும், யானைக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது கவனக்குறைவுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும் குழு ஆராயவுள்ளது.

காட்டு யானைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான உரிய செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளன.

உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களின் உதவி பெறப்படும்

இந்த விசாரணை நடவடிக்கைகளின்போது தேவைக்கேற்ப உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் நிபுணர் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கை, காட்டு யானைகளின் நலனுக்கான முன்மொழியப்பட்ட செயற்பாட்டு நடைமுறைக் கட்டமைப்பு மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

காவன்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, காட்டு யானைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் இவ்விசாரணை முக்கியத்துவம் பெறுகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1243196

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time