உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 25, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல்; சந்தேகநபர் கைது.!!!

-தில்சாத் பர்வீஸ்-

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபானப் போத்தல்களைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 125 பீர் போத்தல்களும் 12 போத்தல்கள் அதிவிசேட சாராயமும் உள்ளிட்ட மதுபானங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கு அமைவாகவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1259205

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time