உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 24, 2026

Hot News

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

ஏறாவூரில் யானைகளின் அட்டகாசம்: பாடசாலை மதில் உடைப்பு; அவசர நடவடிக்கைக்கு கோரிக்கை.!!!

மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் அமைந்துள்ள விபுலானந்தா பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு யானைக் கூட்டம் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த சம்பவத்தில், இரவு நேர வகுப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சுமார் 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி வந்த யானைக் கூட்டம், அருகிலுள்ள விபுலானந்தா பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

இதன்போது, பாடசாலையில் இரவு நேர வகுப்புகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையினால் நிர்வகிக்கப்படும் குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி யானைகள் வருவதால், அருகிலுள்ள பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை நுழைந்து சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாகப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமும் அப்பகுதியில் எழுந்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

யானைகளால் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ உயிராபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்பது யார் எனக் கேள்வி எழுப்பிய அவர், குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி வரும் யானைகள் ஏறாவூர் நகரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து மக்களைத் தாக்கினால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் வினவினார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் கஜேந்திரன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோர், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.

பாடசாலை மதில் சுவர் உடைக்கப்பட்டு, இரவு நேர வகுப்புகளில் இருந்த மாணவர்கள் ஆபத்தை எதிர்கொண்டுள்ள இச்சம்பவம், ஏறாவூர் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, குப்பை மேட்டுப் பகுதியை நிர்வகிக்கும் ஏறாவூர் நகர சபை நிர்வாகம், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு, பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றையும் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1257527

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time