உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 16, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் முன்பான பிக்குகளின் போராட்டம் முடிவு.!!!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை அகற்றிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதையும், பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் தடை செய்யுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்குப் பொலிஸாரால் வாசித்துக் காண்பிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நீதிமன்ற உத்தரவு கையளிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் பேருந்துகளுடன் வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு தங்கியிருந்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தங்களது கூடாரங்களையும் ஏனைய பொருட்களையும் அகற்றிக்கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் கண்டியிலிருந்து நடைபயணப் பேரணியாக வந்த குழுவினரே, காலி வீதிக்கு அருகில் தங்கியிருந்து இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1235990

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time