உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 16, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

சவூதி அரேபியாவுக்கான விமானச் சேவைகள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு.!!!

சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

வணிக ரீதியிலான விமானச் சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதற்குச் சாதகமான சூழல் நிலவுவது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, குறித்த விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானப் பயணங்கள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

அதேவேளை, வெளிநாடுகளில் உள்ள பயணிகள் +94 11 777 1979 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், வட்ஸ்அப் (WhatsApp) மூலம் +94 74 444 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1235962

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time