கவிஞர் கலைமதி றபாய்தீன் எழுதிய; நாவும் பேனாவும் கவிதை நூல் வெளியீடு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
கவிஞர் கலைமதி எம்.ஏ.சி. றபாய்தீன் எழுதிய “நாவும் பேனாவும்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (04) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல். ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்றது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 17 வது வெளியீடாக வெளிவந்த “நாவும் பேனாவும்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் அவர்களும், சிறப்பு அதிதியாக திருமதி காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் முன்னிலை அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ் எச் எம் அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம் ஐ எம் ஜெசீம் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நூலின் முதல் பிரதியை தொழில் அதிபர் தம்புள்ள கோல்ட் ஹவுஸ் உரிமையாளர் எம் எல் வை அறபாத் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.