உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்ற: லேப்ராஸ்கோபிக் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை.!!!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று (26) மகளிர் மருத்துவத் துறையில் முக்கிய முன்னேற்றமாக லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி (Laparoscopic Hysterectomy) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் M.S.M. ஜாபிர் அவர்களின் முழுமையான வழிகாட்டலின் கீழ், மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் நிபுணர் டாக்டர் M. சிவதீபன்ராஜ் தலைமையில் இந்த நவீன அறுவை சிகிச்சை சிறப்பாக இடம்பெற்றது.

லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி என்பது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, சிறிய துளைகளின் மூலம் கேமரா மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் முறையாகும்.

முக்கிய நன்மைகளாக குறைந்த இரத்த இழப்பு, வலி குறைவு, பெரிய அறுவை காயம் இல்லாமை, தொற்று அபாயம் குறைவு, விரைவான நடமாட்டம், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல், இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புதல் போன்றவையாகும்.

இந்த முறையால் நோயாளியின் உடல் மற்றும் மனநலம் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மகளிர் மருத்துவ சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் நோயாளிகள் தூர நகரங்களுக்கு செல்லாமல் தங்கள் பகுதியிலேயே உயர்தர சிகிச்சையை பெற முடிகிறது.

எதிர்கால திட்டங்களில் லேப்ராஸ்கோபி மூலம் சிகிச்சை வழங்கப்படவிருக்கும் முக்கிய பெண்கள் நோய்களாக கருப்பை கட்டிகள் (Fibroid), முட்டைச்சினை கட்டிகள் (Ovarian cyst), எண்டோமெட்ரியோசிஸ், வெளிக்கருப்பை கர்ப்பம் (Ectopic pregnancy), குழந்தையின்மை (Subfertility) தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், Diagnostic & Operative Laparoscopy போன்ற குழந்தையின்மை சிகிச்சைகளிலும் லேப்ராஸ்கோபி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை அனஸ்தீசியா மருத்துவர்கள், தியேட்டர் நர்சிங் குழு மற்றும் மருத்துவ குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால் சாத்தியமானது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700708

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time