உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட; 408 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – பொலிசார் தீவிர விசாரணை.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்தியாவிலிருந்து கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 408 கிலோகிராம் பீடி இலைகளை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேக நபரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன் படுத்திய பொலோரோ ஜீப் வண்டியையும் நுரைச்சோலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் வியாழக்கிழமை (02) இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் சிறப்பு பணியகத்தின் கற்பிட்டி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விஷேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 13 பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பொலேரோ ஜீப்பும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஜீப் வண்டி என்பன புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 809914

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time