உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

க.பொ.த. சாதாரண தரத்தில் 9A சாதனை படைத்த மாணவருக்கு: இல்லத்திற்கே சென்று வை.எம்.எம்.ஏ கௌரவிப்பு.!!!

-கே.ஏ.ஹமீட்-

வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9A தரச் சித்தியைப் பெற்று (English Medium) சாதனை படைத்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் முகம்மது றுமைஸ் அன்சீப் அஹமட் இல்லத்திற்கு நைற்று (26) மாலை நேரில் சென்று YMMA  அட்டாளைச்சேனை அமைப்பினர் குறித்த மாணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவித்தனர்.

முகம்மது றுமைஸ் அன்சீப் அஹமட்டின் தந்தை அப்துல் ரஹ்மான் முகம்மது றுமைஸ் அவர்கள் YMMA
அட்டாளைச்சேனையின் உபதலைவர்களில் ஒருவராக இருந்து பல்வேறுபட்ட
சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வானது வை.எம்.எம்.ஏ.
அட்டாளைச்சேனையின் தலைவர்
பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம் தலைமை யில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA
பேரவையின் அம்பாறை மாவட்டப்
பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் MIM.றியாஸ், அட்டாளைச்சேனை
YMMA ஆலோசகர் சமூக செயற்பாட்டாளர்
அன்வர் நௌஷாட் (றிம்ஸி), YMMA
அட்டாளைச்சேனை பொருளாளர் ஓய்வு நிலை ஆசிரியர் AM.சுலைமாலெப்பை ஆகியோர்களால் இக்கௌரவம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் YMMA அட்டாளைச்சேனை
செயலாளர் UL.ஹம்மாது, கல்வி பிரிவின் செயலாளர் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ். எம்.நஸீர்,மாணவரின் தந்தை ஏ.ஆர்.எம். றுமைஸ் மற்றும் றுமைஸ் அவர்களின் தந்தை அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066890

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time