சவூதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!!!
சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) பகுதியில் இன்று (28) ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டரே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, விபத்து நிகழ்ந்தபோது ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சவூதி அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், விபத்திற்கான உண்மையான காரணத்தை விரைவாகக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.