உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஆசியக் கடற்கரை விளையாட்டில்: இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்.!!!

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை அணிக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான நீளம் பாய்தல் (Long Jump) போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜயத்ர சம்பத் மிரண்டா சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இன்று (25) சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் தன்னுடைய திறமையான செயல்திறனின் மூலம் முன்னணி இடத்தைப் பிடித்து இந்த சாதனையைப் பதிவு செய்தார்.

இதன் மூலம் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பதக்கப் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளது. போட்டியில் வியட்நாம் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், போட்டியை நடத்தும் நாடான சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066730

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time