உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் – முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டு; வரலாற்று சாதனை.!!!

மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில நாட்களாக முன்பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த முக்கிய சாதனை, மருத்துவர் எஸ்.பி.ஏ.எம் முஜாஹித் (Dr. SBAM Mujahid) அவர்களின் தலைமையிலான சிறுநீரக மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலுடன், மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் இரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒத்துழைப்பில் நிறைவேற்றப்பட்டது.

சிகிச்சை பெற்ற நோயாளி தற்போது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதையும் வைத்தியசாலை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இச்சிகிச்சை வெற்றி, மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தின் மருத்துவத்துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கி, மக்கள் தங்களுக்கு அருகிலேயே மேம்பட்ட சிகிச்சைகளை பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இதனை மருத்துவத்துறையினர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பெருமையுடன் வரவேற்கின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 259136

Search

விளம்பரங்கள்