உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 15, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் முன்வர வேண்டும் – பிரதமர் ஹரிணி.!!!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சரியான மற்றும் நம்பகமான தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டின் ஊடகங்கள் முன்னோடிப் பங்காளிகளாகச் செயற்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (14) அலரி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட RIES (Reform Information & Enquiry Service) என்ற தகவல் மற்றும் விசாரணைச் சேவையின் உத்தியோகபூர்வ இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தமது கேள்விகளை முன்வைப்பதற்காக https://edureformfact.moe.gov.lk என்ற இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2026ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு ஆறாம் தரத்திற்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான ஆசிரியர் பயிற்சி, கல்வி உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனனம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கல்வி முறையிலிருந்து விலகி, மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், தொடர்பாடல் திறன் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் மாணவர் மையக் கல்வி முறையை உருவாக்குவதே இச்சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், பொதுக் கல்வி, தொழிற்கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 13ஆம் தரம் வரை எந்தவொரு மாணவரும் கல்வி வாய்ப்புகளை இழக்காத வகையில் புதிய கற்றல் பாதைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறன்களையும் கற்றல் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியாக மதிப்பிடும் புதிய மதிப்பீட்டு முறைகளும் இதன் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

கல்வியை அரசியல் மோதல்களுக்கான களமாக மாற்றாமல், நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்வி நிபுணர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1233905

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time