உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 18, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டில் 30 இலட்சம் ரூபாய் தங்க நகைகள் திருட்டு; 56 வயது நபர் கைது.!!!

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து, சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காத்தான்குடி பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் விற்பனை செய்யப்பட்ட மோதிரம், பெண்டன்ட், காதணி உள்ளிட்ட தங்க நகைகளும், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1240167

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time