காவி உடையை அரசியலுக்குப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – தோல்வியடைந்த அரசியல் தரப்பினருக்கு தேரர் எச்சரிக்கை.!!!
ஞானசாரரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, தோல்வியடைந்த அரசியல் தரப்பினர் தங்களது அரசியல் நோக்கங்களை மறைக்க முயற்சிப்பதாகக் மெதிரிகிரிய அசோகாராம பிரிவெனா கல்கமுவே நந்தாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
தங்களது வருமான வாய்ப்புகளை இழந்த சிலர் பணத்தைச் செலவிட்டு காவி உடையை இவ்வாறு பயன்படுத்துவது, எதிர்காலத்தில் பிக்குகள் தங்களது கருத்துக்களை வெளியிட முடியாத நிலையை உருவாக்கக்கூடும். சட்டரீதியான தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் ஞானசார தேரர் விடுதலையாகி வருவார். தோல்வியடைந்த அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படும் இந்தத் திட்டத்தை உடனடியாகத் தோற்கடிக்க வேண்டும்.
பௌத்த கொடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த இனவாத வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மகா சங்கத்தினரிடமும் மக்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.