உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 18, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கைத்தொலைபேசி மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை;  பொலிஸார் அதிரடி – 35 வயது நபர் கைது.!!!

சாய்ந்தமருது மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை சனிக்கிழமை (17) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியிலிருந்து சாய்ந்தமருது நோக்கி வான் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இந்தச் சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளைச் சாய்ந்தமருது பொலிஸார் இன்று (18) முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் மேற்பார்வையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையில், பொலிஸ் சார்ஜன்ட்களான பாறுக் (43890), கியாஸ் (76369), மோகன்ராஜ் (83645) மற்றும் பொலிஸ் சாரதி சஞ்சீவ ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1240302

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time