கொழும்பில் திரண்ட மக்கள்; திருடர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி ஜனாதிபதி செயலகத்தில் மகஜர்.!!!
கொழும்பில் ‘ஜனவரமே புரவெசியோ’ (மக்களாணையின் குடிமக்கள்) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய மக்கள் பேரணி இன்று (17) நடைபெற்றது.
“திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிப்போம்” என்ற எழுச்சி முழக்கத்தை முன்னிறுத்தி இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வாக கொழும்பு கோட்டைப் பகுதியில் ஒன்றுகூடிய குறித்த அமைப்பினரும் பொதுமக்களும், அங்கிருந்து காலி முகத்திடல் ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
இதன்போது, தமது கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
திருட்டு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடையூறாக அமையும் முயற்சிகளை எதிர்ப்பதே இந்தப் பேரணியின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



