உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கடலில் ஏற்படும் அவசரநிலைகளை எதிர்கொள்ள மீனவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கிய கடற்படை.!!!

-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-

இலங்கை கடற்படையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் மீனவ சமூகத்தினரை வலுவூட்டும் முதலுதவிப் பயிற்சித் திட்டத்தின் மற்றுமொரு பயிற்சிப் பட்டறை, 2026 ஒக்டோபர் 16ஆம் திகதி காலி, தோடந்துவ மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

தெற்கு கடற்படை கட்டளையின் மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இப்பயிற்சித் திட்டத்தில், மீனவ சமூகத்தினருக்கு முதலுதவி தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, அடிப்படை உயிர் ஆதரவு (Basic Life Support), மனநல நல்வாழ்வு, கடலில் மீன்பிடி நடவடிக்கைகளின்போது ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளைக் கையாளுதல் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், கடலில் விபத்துகள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவரும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவர்களுக்கு உரிய முதலுதவி வழங்கும் முறைகள் குறித்தும் மீனவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடலில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளைத் திறம்படக் கையாள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் முதலுதவி வழங்குவதற்கும் தேவையான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மீனவ சமூகத்தினரிடையே மேம்படுத்துவதே இப்பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை கடற்படையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இத்தகைய பயிற்சிகள், மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், கடலில் ஏற்படும் அவசரநிலைகளின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வையும் திறன்களையும் வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1238390

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time