உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

சொகுசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு; 15 பேர் காயம்.!!!

• புத்தளம் – திருகோணமலை வீதியில் கோர விபத்து; பெண் பயணி உட்பட இருவர் பலி.

புத்தளம் – திருகோணமலை வீதியில் மஹாஹென்யாய சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து, அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேற்று (22) மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, பேருந்து வீதியோரத்திலிருந்த பாலத்திலும் மின்கம்பத்திலும் மோதி கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் சாலியவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1256487

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time