உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

வங்காள விரிகுடாவில் புதிய சூறாவளி உருவாகும் சாத்தியம்: இலங்கையில் மழை அதிகரிக்கும் என எச்சரிக்கை.!!!

• அக்டோபர் 26ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுப்பெறலாம்; சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கமாக, எதிர்வரும் சில நாட்களில் இலங்கையின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஒக்டோபர் 23ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஒக்டோபர் 24ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானிலைத் தொகுதி மேற்கு–வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதியளவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். தொடர்ந்து, ஒக்டோபர் 26ஆம் திகதி காலையளவில் மத்திய–மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் சூறாவளியாக மாறக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வானிலைத் தொகுதி இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதனுடன் தொடர்புடைய காற்றுப் பாங்கின் மாற்றம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த முந்தைய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாட்டிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்கின்றது.

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

ஒக்டோபர் 24ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல், பலத்த காற்று குறித்து அவதானம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம். எனவே, இவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1255094

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time