உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

2700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது; இரு பெண் ஐஸ் வியாபாரிகளுக்கு விளக்கமறியல்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் 2700 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார்

காத்தான்குடி பொலிஸார் வியாழக்கிழமை (03) நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாலமுனை ஆரையம்பதி மைதானத்துக்கு அருகில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை ஆரையம்பதி செல்வாநகர் கடற்கரை வீதியில் 2500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவரும், காத்தான்குடி பிரதேசத்தில் 6000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் ஹீரோயின் போதைப் பொருட்களுடன் 35 வயதுடைய பெண்ணொருவரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண் போதைப்பொருள் வியாபாரிகளும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065407

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time