இணையம் மற்றும் சமூக வலைத்தள நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.!!!
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தையும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய அவசர தொடர்பு இலக்கங்களையும் பயன்படுத்தி தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றவியல் விசாரணைத் திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூலமாகவும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.