அக்குறணை கோர விபத்து: கொங்கிறீட் கலவை வாகன சாரதி கைது.!!!
• ஆறு பேர் உயிரிழப்பு; ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்து தொடர்பில், கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதியை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அக்குறணை, கண்டி–மாத்தளை வீதியின் குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











