உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

பேருந்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’: சாரதி, நடத்துனர் பொலிஸாரிடம் சிக்கினர்.!!!

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிப் பயணித்த பேருந்தொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை மீட்டுள்ள பொலிஸார், குறித்த பேருந்தின் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர்.

அம்பாறை பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த பேருந்து, அம்பாறை நகரின் மையப்பகுதியில் வைத்து பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது. இதனையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நடத்துனரிடமிருந்து 5,050 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், சாரதியின் இருக்கைக்கு அருகிலுள்ள முன்பக்க டாஷ்போர்டுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2,050 மில்லிகிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சாரதியே குறித்த பேருந்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் நீண்டகாலமாக கேத்சிரிகம பகுதியில் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சாரதி கொக்னஹர பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நடத்துனர் பஹலந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் பேருந்து கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்தவர்கள் மாற்று வாகனங்களில் தமது பயணத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து குறித்த பேருந்தின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்துச் சேவை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பேருந்தையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சியின் மேற்பார்வையிலும் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை பிரிவு 1-ன் உதவிப் பொலிஸ் அதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் வழிகாட்டலில், மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கர ஆகியோரின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் குழுவினர் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1242131

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time