உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!
IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!

Share :

இறைச்சி, மீன் கடைகளில் மருத்துவப் பரிசோதனை அவசியம்; தராசு மோசடிகளைத் தடுக்கவும் கோரிக்கை.!!!

-தில்சாத் பர்வீஸ்-

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடுவோருக்கு மருத்துவப் பரிசோதனைகளை கட்டாயமாக்குவதுடன், இலத்திரனியல் தராசுகளை உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் வலியுறுத்தியுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வு கடந்த 15ஆம் திகதி நடைபெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இறைச்சிக் கடைகளில் பணியாற்றுவோர் முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சிலர் புகைத்தல் பழக்கத்துடன் உணவுப் பொருட்களைக் கையாள்வதாகவும், மீன் விற்பனையிலும் இத்தகைய நடைமுறைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனையாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை ஒரு நிபந்தனையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் எனவும், இவ்விடயத்தில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் எவருக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் ஒரே விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, பிரதேச சபையின் கடந்த கூட்டத்தில் இலத்திரனியல் தராசுகளை அறிமுகப்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை எந்தக் கடையிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் பலர் நன்மையடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சில இறைச்சி, மீன் மற்றும் மரக்கறிக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளின் அளவீடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், ஒரு தராசில் எடைபோடப்படும் பொருளை மற்றொரு தராசில் அளவிடும்போது 200 முதல் 300 கிராம் வரை வித்தியாசம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, வெளியிடங்களிலிருந்து வந்து வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தராசுகளில் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனவே, நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் இலத்திரனியல் தராசுகளைப் பயன்படுத்தும் நடைமுறையை விரைவாக அமுல்படுத்துவதுடன், உணவுப் பொருட்களைக் கையாள்வோருக்கான சுகாதார நடைமுறைகளையும் முறையாகக் கண்காணிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் எஸ். நளீம் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1243702

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time