உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

2027 ஜனவரியில் மீண்டும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.!!!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2027 ஜனவரி மாதத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் 65,000 ரூபாவாகவும், மருத்துவர்களின் ஆரம்பச் சம்பளம் 94,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டியவில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதற்கும் வலுவான அரச சேவை அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 121,000 புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேர்ப்புகள் அரசியல் நியமனங்கள் மூலம் மேற்கொள்ளப்படாமல், போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஊடாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிலுநர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், அரச சேவைகளை மக்களிடம் திறம்படக் கொண்டு சேர்ப்பதற்கும் வலுவானதும் வினைத்திறனானதுமான அரச சேவை அவசியம் என ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1223848

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time