உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கை கடற்படையின் 265ஆவது ஆட்சேர்ப்பு: 323 பயிற்சி கடற்படையினர் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறினர்.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வக் கடற்படையின் 265ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 323 பயிற்சி கடற்படையினர் தமது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதில் நிரந்தரக் கடற்படையைச் சேர்ந்த 301 பயிற்சி கடற்படையினரும், தன்னார்வக் கடற்படையைச் சேர்ந்த 22 பயிற்சி கடற்படையினரும் அடங்குகின்றனர்.

இவர்களின் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வு, நேற்று (10) பூனேவவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா பயிற்சி நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

ஷிக்ஷா பயிற்சி நிறுவனத்தின் கட்டளை அதிகாரியும் தளபதியுமான கெப்டன் கௌம் மாரபகேவின் அழைப்பின் பேரில், கடற்படைப் பிரதி பிரதான அதிகாரியும் கிழக்குக் கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பயிற்சி காலத்தில் வழங்கப்பட்ட கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பயிற்சி கடற்படையினருக்கு பிரதம அதிதியால் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, சிறந்த பயிற்சி கடற்படையினருக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீராங்கனை ஆர்.எஸ். கித்தவகே பெற்றுக்கொண்டார்.

அனைத்துப் பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றமைக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீரர் ஆர்.பி.எஸ். கருணாரத்ன பெற்றுக்கொண்டார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தை எஸ்.ஜி.ஜி.கே. விஜேரத்னவும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வெற்றிக் கிண்ணத்தை கே.டபிள்யூ.பி.ஏ.ஐ. சந்தமாலியும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தை எம்.பி.ஜி.சி.என். பெத்தேவெலகே பெற்றுக்கொண்டதுடன், சிறந்த பயிற்சிப் பிரிவுக்கான வெற்றிக் கிண்ணத்தை ‘சயுரள’ பிரிவு தனதாக்கிக்கொண்டது.

பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய கடற்படையினருக்கு வாழ்த்துத் தெரிவித்த ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அவர்களின் கல்வி, தொழில்சார் அல்லது சமூகப் பின்னணி எதுவாக இருந்தாலும், பயிற்சியை நிறைவு செய்த பின்னர் அவர்கள் இலங்கை கடற்படையின் உறுப்பினர்களாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் உலகத்தால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனவே, இலங்கை கடற்படையின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த வெளியேறும் அணிவகுப்பின் சிறப்பம்சமாக, வெளியேறும் இரவு அணிவகுப்பில் முதன்முறையாகப் பரசூட் சாகசக் காட்சி இடம்பெற்றது.

இச்சாகச நிகழ்வில் சிறப்புப் படகுப் படைப்பிரிவின் கொமாண்டர் திஸ்ஸ குமார மற்றும் ப்ளீட் சீப் பெட்டி ஒபிசர் கே.சி.எம்.கே. கீகியனகே ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரின் பங்கேற்புடன் கண்கவர் சாகச அணிவகுப்பும் இடம்பெற்றது. கடற்படை இசைக்குழு, கலாசார நடனக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்படை அங்கம்பொர அணியினரின் சாகசங்களும் நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.

பாரம்பரிய சூரிய அஸ்தமன நிகழ்வைத் தொடர்ந்து வெளியேறும் அணிவகுப்பு நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் இந்திக த சில்வா, கடற்படை நபர்கள் பணிப்பாளர் கொமடோர் மனோஜ் லீலாரத்ன, ஷிக்ஷா பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி நிர்வாக அதிகாரி கொமாண்டர் கசுன் நுவரபக்ஷ உள்ளிட்ட கடற்படைத் தலைமையக மற்றும் கடற்படை கட்டளைகளின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், கொடி அதிகாரிகள், விருந்தினர்கள், கடற்படையினர் மற்றும் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1222272

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time